உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்களும், ‘லாயர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பின் தலைவர் ஆனந்த் குரோவர் மற்றும் அவரது மனைவியும் மூத்த வழக்குரைஞருமான இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இல்லங்களில் இன்று (வியாழக்கிழமை) மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) ரெய்டு மேற்கொண்டிருப்பதற்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.